Wednesday, October 9, 2024

நாங்கள் திட்டமிட்டபடி எல்லா பணிகளும் நடந்துவருகிறது… கமல்ஹாசனின் #KH237 குறித்து அப்டேட் சொன்ன அன்பறிவு!

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

மணிரத்னம் இயக்கத்தில் கமல் ஹாசன் நடித்து வருகிற படம் ‘தக் லைஃப்’. இதில் கமலுடன் சிம்பு, திரிஷா, விருமாண்டி அபிராமி உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார்கள். படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளது. கமல் மற்றும் மணிரத்னம் நீண்ட காலம் கழித்து மீண்டும் ஒருசேர பணியாற்றுவது காரணமாக இந்த படத்தின் மீதான எதிர்பார்ப்பு பெரிதும் உயர்ந்துள்ளது. இந்த படத்துக்கு ஏ.ஆர். ரஹ்மான் இசையமைக்கிறார். ‘தக் லைஃப்’ படப்பிடிப்பு முடிந்ததும், கமல் அன்பறிவ் இயக்கும் புதிய படத்தில் நடிக்கவிருக்கிறார்.

அன்பறிவு அண்மையில் அளித்த ஒரு பேட்டியில், கமல் ஹாசன் அவர்கள் தயாரிக்கும் #KH237 படத்தின் பணிகள் திட்டமிட்டபடி நடந்துவருவதாக தெரிவித்தனர். “நாங்கள் இயக்குநராக அறிமுகமாக இருப்பது மிகுந்த மகிழ்ச்சியளிக்கிறது,” என்றார்.

KH237 படத்தின் படப்பிடிப்பு 2025 ஜனவரியில் தொடங்க இருக்கிறது. உலகநாயகன் கமல் ஹாசன் எங்கள் மீது நம்பிக்கை வைத்து இந்த மகத்தான வாய்ப்பை வழங்கியது எங்களுக்கு ஒரு மிகப்பெரிய அதிர்ஷ்டம். எங்கள் முழுமையான கவனம் தற்போது #KH237 படத்தின் மேல் உள்ளது. இது ஒரு மாபெரும் ஆக்ஷன் திரைப்படமாக இருக்கும், மேலும் ஒவ்வொரு சினிமா ரசிகனுக்கும் இது மிகப்பெரிய விருந்தாக அமையும் என்றார்.

- Advertisement -

Read more

Local News