தென்னிந்திய திரைப்பட உலகின் முன்னணி நடிகையாக வலம் வருபவரராஷ்மிகா மந்தனா. அண்மையில், அவர் நடித்த குபேரா திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்றது. இந்த வெற்றியைத் தொடர்ந்து, அவர் மைசா என்ற திரைப்படத்தில் நடிக்கிறார்.

ராஷ்மிகாவுக்கு ரசிகர்களின் அன்பும் ஆதரவும் இருப்பது போலவே அவருக்கு எதிராக டிரோல்களும் விமர்சனங்களும் அடிக்கடி சமூக வலைதளங்களில் எழுந்து கொண்டே இருக்கின்றன.
இதுபற்றி அளித்த பேட்டியில் ராஷ்மிகா கூறியதாவது, “நான் உணர்ச்சிவசப்படும் ஒரு மனுஷி, ஆனால் அந்த உணர்வுகளை வெளியில் காட்ட விரும்புவதில்லை. நான் அதை வெளிப்படுத்தினால், ‘ராஷ்மிகா கேமராவுக்காக செய்கிறார்’ என்று சிலர் கூறுவார்கள். எனக்கு எதிராக டிரோல் செய்வதற்காக சிலர் பணம் பெறுகிறார்கள். ஏன் இப்படி நடந்து கொள்கிறார்கள் என்று எனக்கு புரியவில்லை. என்னை வளர விடாமல் தடுக்கின்றனர் என்பது உண்மை. இது எனக்கு மிகுந்த வருத்தம் அளிக்கிறது. என்மீது அன்பு காட்ட முடியாவிட்டாலும், குறைந்தபட்சம் அமைதியாக இருக்கவும் என்று அவரது வேதனையை வெளிப்படுத்தியுள்ளார்.