பிரபல நடிகையான சமந்தா நாகசைதன்யாவை காதலித்து திருமணம் செய்து கொண்டு சில வருடங்களிலேயே பிரிந்தார். சமந்தாவுக்கும், அவர் நடித்த வெப் சீரிஸ்களை இயக்கிய ராஜ் நிடிமொரு என்பவருக்கும் காதல் என கடந்த சில மாதங்களாக செய்திகள் வெளியாகின.

இருவரும் இணைந்து எடுத்துக் கொண்ட புகைப்படங்களை சமந்தா சமூக வலைத்தளங்களில் வெளியிடவே அதைப் பலரும் உண்மை என நம்பினார்.
இதனிடையே, அவர்கள் இருவரும் ஒன்றாக வசிப்பதற்காக வீடு தேடிக் கொண்டிருப்பதாகவும் கூட செய்திகள் பரவின. இந்நிலையில் சமந்தாவின் மேனேஜர் இந்த காதல் செய்திகள் அனைத்தும் வெறும் வதந்தி தான் எனவும் இதை நம்பவும் பெரிதுபடுத்த வேண்டாம் என கூறியுள்ளார்.