பாலிவுட் நடிகர் அக்சய் குமார் – இயக்குநர் தருண் மன்சூகானி ஆகியோரின் கூட்டணியில் உருவான நகைச்சுவைத் திரைப்படம் “ஹவுஸ் புல் 5” சஜித் நதியாத்வாலா தயாரித்த இந்தப் படத்தில், அக்சய் குமார், ரித்தேஷ் தேஷ்முக், அபிஷேக் பச்சன், ஜாக்குலின் பெர்னாண்டஸ், சோனம் பாஜ்வா, நர்கிஸ் பக்ரி, பர்தீன் கான், சவுந்தர்யா சர்மா, ஜாக்கி ஷெராப், சஞ்சய் தத், நானா படேகர் உள்ளிட்ட 24 நட்சத்திரங்கள் நடித்திருக்கின்றனர்.கடந்த ஜூன் 6ம் தேதியன்று திரையரங்குகளில் வெளியான இந்தப் படம் ரசிகர்கள் மற்றும் விமர்சகர்களிடையே மிகுந்த வரவேற்பை பெற்று வந்தது.இந்நிலையில், இந்தப் படத்தின் வசூல் குறித்து தயாரிப்பு நிறுவனம், அவர்களது எக்ஸ் தளத்தில் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. உலகளவில் இப்படம் ரூ. 300 கோடி வசூல் செய்து மிகப் பெரியளவில் வெற்றியடைந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Share
- Advertisement -
- Advertisement -
- Advertisement -
- Advertisement -
Read more