ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித்குமார் நடித்திருக்கும் குட் பேட் அக்லி திரைப்படம் ஏப்ரல் பத்தாம் தேதி வெளியாகவிருக்கிறது. சமீபத்தில் வெளியான படத்தின் டீசர் ரசிகர்களிடம் அமோக வரவேற்பை பெற்றது.
படத்தின் முதல் சிங்கிள் இன்னும் சில நாட்களிலும், படத்தின் ட்ரெய்லர் இந்த மாதத்தின் இறுதியில் வெளியாகும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
இந்நிலையில் குட் பேட் அக்லி படத்தின் டீஸர் மேக்கிங் வீடியோ வெளியாகி வைரலாகி வருகிறது. இந்த வீடியோவின் ஒவ்வொரு காட்சியிலும் அஜித் தனக்கே உரிய தனித்துவமான நடிப்பால் அனைவரையும் அசர வைக்கிறார். ஒவ்வொரு காட்சி படப்பிடிப்பின் முடிவிலும் அங்குள்ள படக்குழுவினரின் கைத்தட்டல் மழையாய் பொழிகிறது. குட் பேட் அக்லி டீஸரை போலவே அதன் மேக்கிங் வீடியோவும் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.