தென்னிந்திய சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவரான அஜித் குமார், தனது 63வது படமான ‘குட் பேட் அக்லி’ வெற்றிக்கு பிறகு கார் ரேஸிங் மீது அதிக கவனம் செலுத்தி வருகிறார். சினிமா மற்றும் கார் ரேஸிங் இரண்டையும் ஒரே நேரத்தில் செய்யமாட்டேன், ஒரு ஆண்டில் 6 மாதம் சினிமாவுக்கும், மீதமுள்ள 6 மாதம் கார் ரேஸிங்குக்கும் ஒதுக்குவேன் என்று அவர் ஏற்கனவே தெரிவித்திருந்தார்.
இந்நிலையில், ‘குட் பேட் அக்லி’ வெற்றிக்குப் பிறகு அஜித் நடிக்கப்போகும் 64வது படத்தை யார் இயக்கப்போகிறார்கள் என்ற கேள்வி கடந்த சில மாதங்களாகவே கிளம்பி உள்ளது. தற்போதைய தகவலின்படி, இந்த படத்தை ஆதிக் ரவிச்சந்திரன் இயக்க உள்ளார் என்றும், கதாநாயகியாக ஸ்ரீநிதி ஷெட்டி நடிக்க உள்ளார் என்றும் கூறப்படுகிறது.
இதைத் தொடர்ந்து, நடிகர் அஜித் மற்றும் இசையமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜா இருவரும் நேரில் சந்தித்துள்ள புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இது சாமான்ய சந்திப்பா அல்லது படத்துக்கு தொடர்பான சந்திப்பா என ரசிகர்கள் குழப்பத்தில் உள்ளனர். யுவன் தனது சமூக வலைதள பக்கத்தில் அஜித்தை சந்தித்ததைப் பற்றி பதிவிட்டுள்ளார். அந்தப் பதிவில், “அஜித் அவர்களை சந்தித்தது சந்தோஷம்… நாங்கள் கார்களைப் பற்றிய டிஸ்கஷன்களில் இருந்தோம்” என தெரிவித்துள்ளார்.