பிரபல ‛எப் 1′ கார் பந்தய வீரரான நரேன் கார்த்திகேயனிடம் சமீபத்திய நிகழ்ச்சி ஒன்றில், சமீபத்தில் வந்த ‛எப் 1′ படத்தின் ரீ-மேக்கில் இங்கு யார் நடித்தால் சிறப்பாக இருக்கும் என கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு அவர், நிச்சயமாக அஜித் தான், அவர் தான் பொருத்தமாக இருப்பார். பல போட்டிகளில் பங்கேற்றுள்ள அவர் 50 வயதிலும் கார் ரேஸில் அதிக ஆர்வத்துடன் ஈடுப்பட்ட வருகிறார். எங்களின் நட்பு 25 ஆண்டுகாலமாக தொடர்கிறது. அவர் மோட்டார் ஸ்போர்ட்ஸை இந்தியாவில் பிரபலப்படுத்துகிறார். அவரின் ரேஸ் குழுவில் நானும் இணைந்துள்ளேன் என்றுள்ளார்.
