நடிகர் அஜித் நடித்த, மகிழ்திருமேனி இயக்கத்தில் உருவான “விடாமுயற்சி” திரைப்படம் நேற்று உலகம் முழுவதும் உள்ள திரையரங்குகளில் வெளியானது.
இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு, அஜித் நடித்த படம் திரைக்கு வருவதால், அவரது ரசிகர்கள் இதை ஒரு பெரிய திருவிழாவாக கொண்டாடினர். வெளியீட்டினை சிறப்பாகக் கொண்டாடுவதற்காக, தமிழக அரசு ஒரு நாளுக்கு மட்டும் 5 சிறப்பு காட்சிகளுக்கு அனுமதி வழங்கியது. இதனால், திரையரங்குகளில் ரசிகர்கள் குவிந்த சூழல் உருவானது.
இந்நிலையில், “விடாமுயற்சி” படம், வெளியான முதல் நாளில் தமிழ்நாட்டில் மட்டும் ₹25 கோடி வசூல் செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.படத்தை பார்த்த பல திரைப்பிரபலங்கள், சமூக ஊடகங்களில் வாழ்த்துகள் தெரிவித்து வருகின்றனர்.தற்போது, அஜித் தனது ரேசிங் பயிற்சிக்காக போர்சுகலில் உள்ளார். அங்கு, தனது குழுவினருடன் எடுத்துக்கொண்ட ஒரு செல்பி வீடியோவை இணையத்தில் பகிர்ந்துள்ளார். இந்த வீடியோ தற்போது வெகுவாக வைரலாகி வருகிறது