ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் நடிகர் அஜித் குமார் நடிப்பில் உருவான ‘குட் பேட் அக்லி’ இன்று உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியானது. இந்த படத்தை அஜித் ரசிகர்கள் உற்சாகமாக கொண்டாடி வருகின்றனர்.
இந்த சூழலில், அஜித்துடன் பணியாற்றிய அனுபவங்களை அவருடன் நடித்த நடிகர்கள் பகிர்ந்து வருகின்றனர். அவர்களில் ஒருவர் நடிகர் அர்ஜுன் தாஸ், அவர் அஜித்துடன் மீண்டும் பணியாற்ற விரும்புகிறேன் என தெரிவித்துள்ளார். அதேபோல், படத்தில் நடித்த தனது அனுபவத்தை நடிகர் பிரசன்னாவும் பகிர்ந்துள்ளார். இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரன் இந்த படத்தை முழுமையாக ஒரு ஃபேன் பாய் அனுபவமாக உருவாக்கியுள்ளார்.
இந்த திரைப்படம் ரசிகர்களிடையே வரவேற்கப்பட்டு கொண்டாடப்பட்டு வரும் நிலையில், நடிகர் அஜித் குமார் தனது அடுத்த கார் பந்தயத்திற்கான தயாரிப்பில் முழு ஈடுபாட்டுடன் இருக்கிறார். அவர் தற்போது GT4 யூரோபியன் சீரிஸ் கார் பந்தயத்தில் கலந்துகொள்ள உள்ளார். இவரது பந்தயத்திற்கான தயாரிப்பு சம்பந்தமான வீடியோவை அஜித்தின் நிறுவனம் இணையத்தில் வெளியிட்டுள்ளது. அந்த வீடியோவில், அஜித் கார் சுற்றிலும் சுழன்று அதில் உள்ள அம்சங்களை ஆராயும் காட்சிகள் இடம்பெற்றுள்ளன.