நடிகர் அஜித் நடிப்பில் ‘விடாமுயற்சி’ என்ற படத்தை இயக்கியுள்ளார் இயக்குனர் மகிழ் திருமேனி. இப்படத்திற்கு அனிருத் இசையமைத்திருக்கிறார். லைகா நிறுவனம் இப்படத்தை தயாரித்துள்ளது. இந்த படத்தில் அர்ஜுன், திரிஷா, ரெஜினா, சந்தீப் கிஷன், ஆரவ் உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.
தமிழ், மலையாளம், தெலுங்கு, கன்னடம் ஆகிய மொழிகளில் இப்படம் பொங்கல் அன்று வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டநிலையில், பின்னர் அன்று வெளியாகாது என்று படக்குழு அறிவித்தது. அஜித் நடித்த மற்றொரு படமான ‘குட் பேட் அக்லி’ ஏப்ரல் 10ம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டதால் ‘விடாமுயற்சி’ திரைப்படத்தை இம்மாத இறுதியில் திரைக்குக் கொண்டு வர தயாரிப்பு நிறுவனம் முடிவு செய்துள்ளதாக கூறப்பட்டது.
இந்த சூழலில், விடாமுயற்சி படத்தின் டிரெய்லர் தற்போது வெளியாகியுள்ளது. ஆக்ஷன் திரில்லர் கதைக்களத்தில் மாஸ் காட்டுகிறார் நடிகர் அஜித். ட்ரெய்லரின் ஒரு ஒரு காட்சியும் ரசிகர்களுக்கு படத்தின் மீதான எதிர்பார்ப்பை தூண்டியுள்ளது.இப்படம் பிப்ரவரி 6-ம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.