அஜித், த்ரிஷா மற்றும் பலர் நடிப்பில், ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் ‘குட் பேட் அக்லி’ திரைப்படம் நேற்று முன்தினம் வெளியானது. இது முழுமையாக அஜித் ரசிகர்களுக்காக எடுக்கப்பட்ட படம் என கூறப்படுவதால், மற்ற ரசிகர்களுக்கு இது பிடிக்கும் என்பதைப் பற்றிய சந்தேகம் பரவலாகக் காணப்பட்டது.

ஆனால், இந்த எண்ணத்தைத் தாண்டி, படத்தின் வெளியீட்டு நாளிலேயே தமிழகத்தில் மட்டும் ரூ.30.9 கோடி வசூலித்ததாக தயாரிப்பு நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்தது. இதுவரை அஜித் நடித்த படங்களில் மிக உயர்ந்த தொடக்க நாள் வசூலை பெற்றது இதுவாகும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
நேற்று வெளியான செய்தியின்படி, தமிழகத்தில் மட்டும் ரூ.30 கோடி வசூலித்துள்ளதாம். வெளிநாடுகளில் மட்டும் ரூ.20 கோடி வரை வசூலித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.