Touring Talkies
100% Cinema

Wednesday, May 14, 2025

Touring Talkies

விஜய் ஆண்டனி நடிக்கும் ‘ககன மார்கன்’ திரைப்படம் மூலம் வில்லனாக அறிமுகமாகும் அஜய் தினேஷ்… இவர் யார் தெரியுமா?

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

ரோமியோ படத்தின் வெற்றியைத் தொடர்ந்து, மீரா விஜய் ஆண்டனி தயாரிப்பில், லியோ ஜான் பால் இயக்கும் ககன மார்கன் திரைப்படத்தில் விஜய் ஆண்டனி நடித்துள்ளார்.

அட்டக்கத்தி, பீட்சா, சூது கவ்வும், இன்று நேற்று நாளை, தெகிடி, முண்டாசுப்பட்டி, காதலும் கடந்து போகும், ஏ1, மாயவன் போன்ற பல குறிப்பிடத்தக்க திரைப்படங்களை எடிட் செய்த புகழ்பெற்ற படத்தொகுப்பாளர் லியோ ஜான் பால் இந்த படத்தின் இயக்குநராக உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.இந்த படத்தில் விஜய் ஆண்டனி, உயர்கட்ட காவல் அதிகாரியாக மிக வித்தியாசமான தோற்றத்தில் நடித்து வருகிறார். ககன மார்கன் என்ற சொல்லுக்கு சித்தர்களின் அகராதியில் “காற்றின் வழி பயணிப்பவன்” என்று பொருள் படுகிறது.

ககன மார்கன் குடும்பத்துடன் சேர்ந்து மகிழ்ச்சியுடன் பார்க்கும் வகையிலான படமாக இருக்கும் என கூறப்படுகிறது. இப்படத்திற்கான இசையையும் விஜய் ஆண்டனி உருவாக்கியுள்ளார். அவருடன் இணைந்து, அஜய் தீஷன், சமுத்திரக்கனி, மகாநதி சங்கர், பிரிகடா, வினோத் சாகர் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இவர்களுடன் தீப்ஷிகா, கலக்கப்போவது யாரு புகழ் அர்ச்சனா, கனிமொழி மற்றும் அந்தகாரம் நட்ராஜன் ஆகியோரும் நடித்துள்ளனர்.

படத்தின் முக்கிய வில்லனாக அறிமுகமாகும் அஜய் தீஷன், விஜய் ஆண்டனியின் அக்காவின் மகன் என்பது குறிப்பிடத்தக்கது. இப்படத்தின் புதிய போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ளது, இதனால் ரசிகர்களின் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. இந்த திரைப்படம் தமிழ், தெலுங்கு, இந்தி, மலையாளம் மற்றும் கன்னடம் ஆகிய மொழிகளில் வெளியாக இருக்கிறது.

- Advertisement -

Read more

Local News