2006-ம் ஆண்டு வெளியான ‘கேங்ஸ்டர்’ திரைப்படத்தின் மூலம் திரையுலகில் அறிமுகமானவர் கங்கனா ரணாவத். அதன்பின், நடிகர் ரவிமோகன் நடித்த ‘தாம் தூம்’ படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானார். தற்போது அரசியலிலும் ஈடுபட்டு வருகிறார்.

பின்னர், மறைந்த தமிழக முதல்வர் ஜெ. ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்று படமாக உருவாகி வெளியான ‘தலைவி’ திரைப்படத்தில் நடித்து ரசிகர்களை கவர்ந்தார். முன்னாள் பிரதமர் இந்திரா காந்தி நாடு முழுவதும் அமல்படுத்திய அவசரநிலையை மையமாகக் கொண்டு உருவான ‘எமர்ஜென்சி’ என்ற திரைப்படத்தில் நடித்தார்.
இந்த சூழலில், கங்கனா ரணாவத் தனக்கு வயதாகி வருவதை பற்றி கருத்து தெரிவித்துள்ளார். அதில் அவர் கூறியதாவது, “நான் என் வயதைப் பற்றி ஒருபோதும் சிந்திக்கவில்லை. ஆன்மீகத்தால் நிரம்பிய என் மனதிற்கு வயது என்பது ஒரு அச்சத்தை ஏற்படுத்துவதில்லை. திரையுலகில் வெண்மயமான முடி உள்ளவர்கள் மீது பயமடையும் சிலரை பார்த்துள்ளேன். ஆனால் அரசியலில் இவ்வாறு இல்லை. வயதாவதுவும் ஒரு சந்தோஷமான அனுபவமே,” என தெரிவித்துள்ளார்.