Saturday, November 16, 2024

நீண்ட இடைவெளிக்குப் பின்னர் புதிய திரைப்படம் ஒன்றை இயக்கவுள்ள பிரியசகி பட இயக்குனர் கே.எஸ்.அதியமான்!

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

தமிழில் ‛சொர்ணமுகி, தூண்டில், பிரியசகி’ ஆகிய படங்களை இயக்கியவர் கே.எஸ்.அதியமான். இவர் ஹிந்தி மொழியிலும் சில படங்களை இயக்கியுள்ளார்.

கடைசியாக, 2010ஆம் ஆண்டு ஹிந்தியில் ‛தும்சே மில்கர்’ என்ற படம் இவரது இயக்கத்தில் வெளியானது. இதற்கிடையில், உதயநிதி, பாயல் ராஜ்புட், ஆனந்தி ஆகியோர் நடிப்பில் ‛ஏஞ்சல்’ என்ற படத்தை அவர் இயக்கினார். இந்த படத்தின் 80 சதவீதம் படப்பிடிப்பு முடிந்திருந்த நிலையில், உதயநிதி அரசியலில் பயணிக்கத் தொடங்கியதால், படத்தின் வேலை பாதியில் நின்றுவிட்டதாக கூறப்படுகிறது.

இந்நிலையில், அதியமான் தற்போது ஒரு புதிய படத்தை இயக்கத் திட்டமிட்டுள்ளார். இதில் நடிகை ரேவதி முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளார். மேலும், முதன்மை கதாபாத்திரத்தில் நடிக்க நடிகர் விதார்த் உடன் பேச்சுவார்த்தைகள் நடைபெற்று வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

- Advertisement -

Read more

Local News