நடிகை வைகா ரோஸ் சமீபத்தில் தாய்லாந்தின் பாங்காக்கிற்கு சுற்றுலா சென்றிருந்தார். அங்கு இரண்டு சிங்கங்களுடன் விளையாடும் அவரது வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

அந்த வீடியோவை பார்த்த ரசிகர்கள், “இங்கே மூன்று சிங்கங்களைப் பார்க்கிறோம். உங்களுக்கு இவ்வளவு தைரியம் எங்கிருந்து வந்தது?” எனக் கிண்டலாகவும், ஆச்சரியமாகவும் கருத்துகளை பதிவு செய்து வருகின்றனர்.
வைகா ரோஸ் மலையாளத்தில் ‘அலெக்சாண்டர் தி கிரேட்’ என்ற படத்தின் மூலம் திரையுலகில் அறிமுகமானார். தமிழில் ‘குழந்தை முன்னேற்ற கழகம்’, ‘அறுவடை’ மற்றும் ‘காதலே காதலே’ போன்ற படங்களில் நடித்துள்ளார்.