கேன்ஸ் சர்வதேச திரைப்பட விழா கடந்த செவ்வாய்க்கிழமை ஆரம்பமானது. இந்த விழா வரும் மே 24-ம் தேதி வரை நடைபெற உள்ளது. விழாவின் தொடக்க நாளில், பிரபலங்களுக்காக சிவப்பு கம்பள வரவேற்பு அளிக்கப்பட்டது..
இந்த நிகழ்ச்சியில் ஹாலிவுட் நடிகர்கள் குவின்டின் டொரன்டினோ, ராபர்ட் டி நிரோ உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். இதில், நடிகர் ராபர்ட் டி நிரோவுக்கு அவரது திரைப்படத் துறையில் உள்ள பணிகளுக்காக வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கப்பட்டது.
இந்த நிகழ்ச்சி நடைபெறும் வேளையில், பாலிவுட் நடிகை ஊர்வசி ரவுத்தேலா ஒரு வித்தியாசமான பாணியில் கையில் பறவையை பிடித்தபடி கிளாமர் உடையில் போஸ் கொடுத்தார். அவரது தோற்றம் அனைவரின் கவனத்தையும் பெற்றது.