நடிகை த்ரிஷா, தமிழ் சினிமாவில் அறிமுகமாகி 22 ஆண்டுகளாக முன்னணி நடிகையாக வலம் வருகிறார். தற்போது, சூர்யாவின் 45வது படத்தில் நடித்து வருகிறார். கடந்த வாரம் வெளியான “விடாமுயற்சி” திரைப்படத்தில், அஜித்துக்கு ஜோடியாக நடித்துள்ளார். இப்படம் வெளியான பின்னர், ரசிகர்கள் மத்தியில் கலவையான விமர்சனங்களைப் பெற்றுள்ளது. இதன் மத்தியில், த்ரிஷாவின் இன்ஸ்டாகிராம் பதிவு அவரது ரசிகர்களை அதிர்ச்சியடையச் செய்துள்ளது.
![](https://touringtalkies.co/wp-content/uploads/2025/02/1000157891-776x1024.jpg)
த்ரிஷா, தனது இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில் பகிர்ந்த பதிவில், “எனது ட்விட்டர் (X) கணக்கு ஹேக் செய்யப்பட்டுவிட்டது. எனவே, அந்த கணக்கில் பதிவிடப்படும் எந்த பதிவிற்கும் நான் பொறுப்பல்ல. கணக்கை மீட்கும் போது தகவல் தெரிவிக்கிறேன்” என்று தெரிவித்தார்.இதை பார்த்த ரசிகர்கள் பெரும் அதிர்ச்சியடைந்தனர்.
![](https://touringtalkies.co/wp-content/uploads/2025/02/1000157890-604x1024.jpg)
த்ரிஷாவை X தளத்தில் 6 மில்லியனுக்கும் அதிகமான மக்கள் பின்தொடர்கின்றனர். இந்நிலையில் அவரது கணக்கு ஹேக் செய்யப்பட்டுள்ள செய்தி இணையத்தில் வேகமாக பரவி வருந்தது. தற்போது அவரது எக்ஸ் கணக்கு மீட்கப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.