தமிழில் ‘என்ன சொல்ல போகிறாய்’ திரைப்படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானவர் நடிகை தேஜூ அஸ்வினி. தற்போது ஜி.வி. பிரகாஷிற்கு ஜோடியாக ‘பிளாக்மெயில்’ என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார்.

சமீபத்தில் அவர் அளித்த பேட்டியில்,சினிமாவிற்கு நான் வந்தது எனக்கே ஒரு எதிர்பாராத நிகழ்வாக இருந்தது. என் நண்பர்களின் ஊடாக யூடியூப்பில் ஒரு குறும்படத்தில் நடித்தேன். அந்தக் குறும்படத்திற்கு கிடைத்த வரவேற்பு, எனை நேரடியாக சினிமா உலகிற்கே அழைத்துவிட்டது. நான் மிகவும் ஜாலியாகவும், உற்சாகமாகவும் இருப்பவள்தான். சும்மா இருக்கவே எனக்கு பிடிக்காது. என் அருகிலுள்ளவர்கள் ஓய்வெடுக்க முடியாத அளவுக்கு நான் நானாகவே ஓடும் ஒரு அலை மாதிரியே இருப்பேன். என்னை யாராலும் கட்டுப்படுத்த முடியாது.
படிக்கும் காலத்திலேயே என் அக்கா காதல் வாழ்க்கையில் நுழைந்துவிட்டார். அதனால்தான் என் பெற்றோர், ‘ஒருத்தியைக் கைவிட்டோம், உன்னையும் விட்டுவிட மாட்டோம்’ என்ற எண்ணத்துடன் மிகவும் கண்டிப்பாக என்னை வளர்த்தார்கள். எனது பள்ளி வாழ்க்கையும், கல்லூரி காலமும் வீடு மற்றும் கல்வி இடையே சிக்குண்டு சென்றுவிட்டது. அந்த நேரத்தில் காதலுக்கே வாய்ப்பே இல்லை. ஆனால், கல்லூரியில் படிக்கும்போது சில சீனியர் மாணவர்களின் மீது சிறு ஈர்ப்பு இருந்தது. அதைத்தவிர வேறு எதுவும் நடந்ததில்லை.
‘பேமிலிமேன்’ படத்தில் சமந்தா நடித்ததைப்போல, எனக்கும் ஆக்ஷன் கதாபாத்திரங்களில் நடிக்கவேண்டும் என்பதற்கான விருப்பம் இருக்கிறது. என் பார்வையில், ஒரு கதைக்கு முத்தக்காட்சி அல்லது நெருக்கமான காட்சிகள் அவசியமாக தேவை என்றால் மட்டும் தான் நடிப்பேன் என்றுள்ளார் தேஜூ அஸ்வினி.