மறைந்த பழம்பெரும் திரைப்பட நடிகரான ரவிச்சந்திரனின் பேத்தி தான்யா ரவிச்சந்திரன். சசிகுமாருடன் இணைந்து நடித்த ‘பலே வெள்ளையத்தேவா’ திரைப்படத்தின் மூலம் திரைத்துறையில் அறிமுகமானார்.

பின்னர், ‘பிருந்தாவனம்’, ‘கருப்பன்’, ‘நெஞ்சுக்கு நீதி’, ‘மாயோன்’, ‘ரசவாதி’ உள்ளிட்ட பல திரைப்படங்களில் நடித்துள்ளார். அதோடு, தெலுங்கு திரைப்படங்களிலும் தான்யா நடித்து ரசிகர்களை கவர்ந்தார்.
இன்ஸ்டாகிராமில் ஆக்டிவாக இருக்கும் தான்யா கவர்ச்சியான புகைப்படங்களை பதிவிட்டு ரசிகர்களை ஈர்த்தார். இந்நிலையில், ‘பென்ஸ்’ திரைப்படத்தின் ஒளிப்பதிவாளராக பணியாற்றும் கவுதமுடன் நடிகை தான்யாவுக்கு நிச்சயதார்த்தம் நடைபெற்றுள்ளது. மேலும், தனது வருங்கால கணவரை முத்தமிடும் புகைப்படத்தை வெளியிட்டு, இந்த தகவலை உறுதிப்படுத்தியுள்ளார்.