அருணாப் குமார் மற்றும் தீபக் குமார் மிஸ்ரா இணைந்து இயக்கும் புதிய திரைப்படம் ‘வ்வான்’ எனும் பெயரில் உருவாகி வருகிறது. இந்தப் படத்தை பாலாஜி டெலிபிலிம்ஸ் மற்றும் டிவிஎப் மோஷன் பிக்சர்ஸ் நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கின்றன. இதில் சித்தார்த் மல்ஹோத்ரா முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார்.

இந்த படம் அடுத்த ஆண்டு திரைக்கு வரவிருக்கிறது. இந்நிலையில், இந்தப் படத்தில் நடிகை தமன்னா இணைந்துள்ளார். அவரது கதாப்பாத்திரத்தை அறிமுகம் செய்யும் வீடியோவையும் படக்குழு வெளியிட்டுள்ளது. இந்த வீடியோ ரசிகர்களிடையே வேகமாக பரவி வருகின்றது.
மேலும், தமன்னா தற்போது அஜய் தேவ்கனுடன் ‘ரேஞ்சர்’ என்ற படத்திலும் நடித்து வருகிறார். அதே நேரத்தில், சித்தார்த் மல்ஹோத்ரா, ஜான்வி கபூருடன் ‘பரம் சுந்தரி’ எனும் திரைப்படத்திலும் நடித்து வருகிறார். இந்தப் படம் ஜூலை 25-ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.