நடிகை தபு, ஹிந்தி, தெலுங்கு மற்றும் தமிழ் திரைப்படங்களில் நடித்த புகழ்பெற்ற நடிகை ஆவார். தற்போது வரை, அவர் ஹிந்தி மற்றும் தெலுங்கு படங்களில் தொடர்ந்து பிஸியாக நடித்து வருகிறார்.

தமிழில் அவர் கடைசியாக நடித்த படம் 2000ஆம் ஆண்டு வெளியான ‘கண்டுக்கொண்டேன் கண்டுக்கொண்டேன்’ மற்றும் அதே ஆண்டில் வெளியான ‘சினேகிதியே’. அந்தப்படங்களுக்குப் பிறகு, இதுவரை எந்த தமிழ் படத்திலும் அவர் நடித்ததில்லை. தற்போது, 25 ஆண்டுகளுக்குப் பிறகு, தமிழில் மீண்டும் நடிக்கிறார் தபு.
இயக்குநர் பூரி ஜெகநாத் மற்றும் நடிகர் விஜய் சேதுபதி இணைந்து ஒரு புதிய திரைப்படத்தில் பணியாற்றி வருகின்றனர். இந்த படம் தமிழ், தெலுங்கு, ஹிந்தி, மலையாளம் மற்றும் கன்னடம் ஆகிய மொழிகளில் உருவாகி வருகிறது. இந்த படத்தை பூரி ஜெகநாத் மற்றும் சார்மி கவுர் இருவரும் இணைந்து தயாரிக்கின்றனர். இந்த படத்தில் முக்கியமான ஒரு கதாபாத்திரத்தில் நடிகை தபு நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார் என்பது அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.