மலையாள திரைப்பட துறையில் நடிகர் சங்கம் “அம்மா” என்ற பெயரில் இயங்கிவருகிறது. கடந்த ஆண்டு வெளியான நீதிபதி ஹேமா கமிஷன் அறிக்கையின் தாக்கத்தால், அப்போது தலைவராக இருந்த மோகன்லால் தனது பதவியிலிருந்து விலகினார். அவரைத் தொடர்ந்து, நிர்வாக குழுவில் இருந்த பெரும்பாலானோர் மொத்தமாக ராஜினாமா செய்தனர்.

இந்நிலையில் இன்று நடந்த தேர்தலில் மலையாள நடிகர் சங்கமான ‘அம்மா’ (AMMA)வின் தலைவியாக, நடிகை ஸ்வேதா மேனன் வெற்றி பெற்றுள்ளார். பல்வேறு சர்ச்சைகளையும், கடுமையான எதிர்ப்புகளையும் தாண்டி அவர் இந்த பதவியைப் பெற்றுள்ளார். ‘அம்மா’ சங்கத்தின் வரலாற்றில், ஒரு பெண் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்படுவது இதுவே முதல் முறை.
முன்னதாக தேர்தல் சமயத்தில் வாக்கு அளித்த மோகன்லால், பத்திரிகையாளர்களிடம் பேசுகையில், “உறுப்பினர்களின் விருப்பத்திற்கிணங்க புதிய நிர்வாகக் குழு அமைக்கப்படும். அது நடிகர் சங்கத்தை சரியான பாதையில் முன்னேற்றும். இந்த சங்கத்தை யாரும் விட்டு விலகவில்லை; அனைவரும் இன்னும் இதன் ஒரு பகுதியாகவே உள்ளோம். நாம் ஒன்றிணைந்து ஒரு புதிய நிர்வாகத்தை உருவாக்க முடியும் என நம்புகிறேன் என்று தெரிவித்தார்