நடிகை சுவாசிகா முன்னதாக தமிழில் சில திரைப்படங்களில் நடித்திருந்தாலும், அவருக்கு பெரும் புகழைப் பெற்றுத்தந்த படம் ‛லப்பர் பந்து’ ஆகும். அந்த படத்திற்கு பிறகு சுவாசிகாவை தேடி ஏராளமான பட வாய்ப்புகள் வந்து கொண்டிருக்கின்றன. தமிழைத் தாண்டி தெலுங்கிலும் அவருக்கு நடிக்க அழைப்பு வந்துள்ளது. புச்சி பாபு சனா இயக்கத்தில் நடிகர் ராம் சரண் ‘பெத்தி’ என்ற படத்தில் நடித்து வருகிறார்.

இந்தப் படத்தில் கதாநாயகியாக ஜான்வி கபூர் நடித்துவருகிறார். மேலும், சிவராஜ்குமார், ஜெகபதி பாபு ஆகியோரும் முக்கியமான கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இப்படத்திற்கு இசையமைப்பவர் ஏ.ஆர். ரஹ்மான், தயாரிப்பாளர்கள் மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம்.
இந்த படத்தில் ராம் சரணின் தாயாராக சுவாசிகாவை நடிக்க அழைத்து பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர். ஆனால் சுவாசிகா அதனை மறுத்துவிட்டாராம். காரணம், “ராம் சரணின் தாயாராக நடிக்க எனக்கு அவ்வளவு வயதாகவில்லை என கூறி வாய்ப்பை மறுத்துவிட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.