மலையாளத் திரைப்பட உலகில் நகைச்சுவை நடிகராக தனது பயணத்தை தொடங்கிய சுராஜ் வெஞ்சாரமூடு, பின்னர் சிறந்த குணசித்திர நடிகராக மாறி, தேசிய விருதையும் வென்றார். இப்போது அவர் வில்லத்தனமான கதாபாத்திரங்களிலும், கதையின் நாயகனாகவும் மாறிமாறி நடித்து வருகிறார். கடந்த ஆண்டு விக்ரம் நடித்த ‘வீர தீர சூரன்’ படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்ததன் மூலம் தமிழ்த் திரையுலகிலும் தனது தடத்தை பதித்தார். தற்போது நெல்சன் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்து வரும் ‘ஜெயிலர் 2’ படத்திலும் அவர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.

இதனிடையில், சிவராஜ்குமார் நடிப்பில் உருவாகி வரும் ‘டாட்’ என்ற கன்னடத் திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிப்பதன் மூலம் கன்னடத் திரையுலகிலும் அறிமுகமாகிறார் சுராஜ் வெஞ்சாரமூடு.
இந்தப் படத்தை அனில் கன்னேகண்டி இயக்கி வருகிறார். தந்தை–மகள் பாசத்தை மையமாகக் கொண்டு இப்படம் உருவாகி வருகிறது. இவ்வாறு ஒரே நேரத்தில் தமிழில் ‘ஜெயிலர் 2’ மற்றும் கன்னடத்தில் ‘டாட்’ எனும் இரண்டு படங்களில் சிவராஜ்குமாருடன் இணைந்து நடிக்கும் அபூர்வ வாய்ப்பை பெற்றுள்ளார் சுராஜ் வெஞ்சாரமூடு.


 
