1980களில் பிரபலமான நடிகைகளில் ஒருவராக இருந்தவர் நடிகை சுகன்யா. பரதநாட்டியக் கலைஞரான இவர், தனது நடிப்பைத் தவிர நாட்டியம் மற்றும் இசையின் மீதும் ஆழமான ஆர்வம் கொண்டவர்.

‘புது நெல்லு புது நாத்து’ திரைப்படத்தின் மூலம் கதாநாயகியாக திரையுலகில் அறிமுகமானார். முதல் படத்திலேயே பல விருதுகளை பெற்றவர். அதன் பின்னர், தமிழைத் தவிர தெலுங்கு, மலையாளம், கன்னடம் போன்ற பல மொழிப் படங்களிலும் நடித்துள்ளார்.
திருவண்ணாமலை கிரிவலப் பாதையில் அமைந்துள்ள ரமணாஸ்ரமத்தில், ஸ்ரீ ரமண மகரிஷியின் 75ஆம் ஆண்டு ஆராதனை விழா நடைபெற்றது. இதில் நடிகை சுகன்யா பங்கேற்று, மனதை மயக்கும் விதமாக ரமணரின் பாடலை பாடினார். பின்னர் அங்கு அமைந்துள்ள சிவலிங்கத்திற்கு அபிஷேகமும் தீபாராதனையும் நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.