பொதுவாகவே திரை நட்சத்திரங்களில் நடிகைகள் சமூக வலைதளங்களில் குறிப்பாக இன்ஸ்டாகிராமில் ஆக்டிவாக செயல்படுபவர்கள். அந்த வகையில், நடிகை ஸ்ருதிஹாசனும் இன்ஸ்டாகிராமில் மிகச் சுறுசுறுப்பாக உள்ளவர்.

ஆனால் கடந்த ஜூன் மாதத்தில், அவரது இன்ஸ்டாகிராம் கணக்கு ஹேக் செய்யப்பட்டுவிட்டது. இதைப் பற்றி அவர் உடனடியாக தனது ரசிகர்களுக்கு தகவல் தெரிவித்தார்.
அதில், “நான் இன்ஸ்டாகிராமில் பதிவிட்டது போல தோன்றும் எந்தவொரு பதிவும் என் செயல் அல்ல. எனவே தயவுசெய்து அந்த பதிவுகளில் கமெண்ட் செய்யவும், அதை ஷேர் செய்யவும் வேண்டாம்,” என எச்சரிக்கை செய்தார். தற்போது, அந்த ஹேக்கான கணக்கு மீட்டெடுக்கப்பட்ட நிலையில், மீண்டும் இன்ஸ்டாகிராம் பக்கம் திரும்பியுள்ளார் ஸ்ருதிஹாசன்.இது தொடர்பாக, ‘I miss you’ மற்றும் ‘I am come back’ எனும் இரண்டு ஸ்டோரிகள் மூலம், தனது இன்ஸ்டாகிராமில் தனது மீள்வருகையை ரசிகர்களுக்கு அறிவித்துள்ளார்.