நடிகர் பவன் கல்யாண் தற்போது நடித்துள்ள திரைப்படம் ‘ஓஜி’. சுஜீத் இயக்கியுள்ள இப்படத்தில், பிரியங்கா மோகன் கதாநாயகியாக நடித்துள்ளார். மேலும், பாலிவுட் நடிகர் இம்ரான் ஹாஷ்மி, பிரகாஷ் ராஜ், ஸ்ரேயா ரெட்டி, அர்ஜுன் தாஸ், ஷ்யாம், ஹரிஷ் உத்தமன் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

டி.வி.வி. என்டர்டெயின்மென்ட் நிறுவனம் சார்பில் டி.வி.வி. தனய்யா இப்படத்தை தயாரித்துள்ளார். தமன் இசையமைத்துள்ள இப்படம் வருகிற 25 ஆம் தேதி வெளியாக உள்ளது. இப்படத்தின் டிரெய்லர் நாளை வெளியாக உள்ளது.
இதற்கிடையில், படக்குழு நடிகை ஸ்ரேயா ரெட்டியின் ஆக்ரோஷமான முதல் லுக் போஸ்டரை வெளியிட்டுள்ளது. இப்படத்தில் அவர் ‘கீதா’வாக நடித்துள்ளார். இந்த போஸ்டர் ரசிகர்களுக்கு இப்படத்தின் மீதான எதிர்பார்ப்பை மேலும் அதிகரித்துள்ளது.