நடிகை ஷோபனா சிறுவயதிலேயே கேரளாவில் இருந்து சென்னை மயிலாப்பூருக்கு பெற்றோருடன் குடிபெயர்ந்தத போது, அவரது பக்கத்து வீட்டில் வசித்தது தான் அனிதா மேனனின் குடும்பம். ஷோபனாவை விட மூன்று வயது குறைவு என்றாலும் கூட இருவரும் நெருங்கிய நண்பர்களாகவே இருந்து வந்தனர். ஷோபனா சினிமாவில் பிசியான காலகட்டத்தில் கூட அனிதாவுடன் நட்பை காப்பாற்றி வந்தார். இந்த நிலையில் உடல் நலக்குறைவு காரணமாக அனிதா மேனன் மறைந்தது மிகப்பெரிய வருத்தத்தை ஷோபனாவுக்கு ஏற்படுத்தி உள்ளது. தாங்கள் இருவரும் எடுத்துக் கொண்ட சிறு வயது புகைப்படங்களை தன்னுடைய சோசியல் மீடியா பக்கத்தில் வெளியிட்டுள்ள ஷோபனா, அனிதா மேனனுக்கு தன்னுடைய இரங்கலையும் அவரது குடும்பத்தினருக்கு ஆறுதலையும் தெரிவித்துள்ளார்.
