‘பகல் நிலவு’, ‘சரவணன் மீனாட்சி சீசன் 3’, ‘ராஜா ராணி’, ‘ரெட்டை ரோஜா’ உள்ளிட்ட பல தொலைக்காட்சிச் சீரியல்களில் நடித்துப் பரிச்சயமானவர் நடிகை ஷிவானி நாராயணன்.

இதற்குப் பிறகு, அவர் ‘பிக்பாஸ் சீசன் 3’ நிகழ்ச்சியில் பங்கேற்றார். அதனைத் தொடர்ந்து ‘விக்ரம்’, ‘வீட்டில விசேஷம்’, ‘நாய் சேகர் ரிட்டர்ன்ஸ்’ போன்ற திரைப்படங்களில் நடித்துள்ளார். எனினும், அவர் எதிர்பார்த்த அளவிலான வாய்ப்புகள் திரைப்பட துறையில் அமையாததால் தற்போது மாடலிங் துறையில் தனது பயணத்தைத் தொடங்கியுள்ளார் ஷிவானி நாராயணன். இதனைக் குறித்த வீடியோ ஒன்றை அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.
அந்த வீடியோவில், வெளிர் பச்சை நிறத்தில் உருவாக்கப்பட்ட தனித்துவமான வடிவமைப்பில் அமைந்த ஆடை அணிந்து அவர் கேட்வாக் செய்வது போன்ற காட்சிகள் இடம்பெற்றுள்ளன. இந்த கேட்வாக் வீடியோ தற்போது ஆறு லட்சத்துக்கும் மேற்பட்ட லைக்குகளைப் பெற்றுள்ளது.