நடிகை ஷில்பா ஷெட்டி கடந்த 2016 ஆம் ஆண்டில் மும்பையின் பாந்த்ரா பகுதியில் பாஸ்டியன் என்ற உணவகத்தைத் தொடங்கினார். பின்னர் அதே பாந்த்ராவில் ஒரு பெரிய இடத்திற்கு மாற்றப்பட்ட அந்த உணவகம், உணவு விரும்பிகளுக்கும் பிரபலங்களுக்கும் செல்லத்தக்க சிறப்பான இடமாக மாறியது.

இந்நிலையில், தனது இணையப் பக்கத்தில் வெளியிட்ட பதிவில், தனது மும்பை உணவகம் பாஸ்டியன் செப்டம்பர் 4 ஆம் தேதி மூடப்படுவதாக ஷில்பா ஷெட்டி தெரிவித்துள்ளார். இதற்காக தனது நண்பர்கள் வட்டாரத்திற்கு அவர் ஒரு இரவு விருந்தையும் ஏற்பாடு செய்துள்ளார். எனினும், அந்த உணவகம் எதற்காக மூடப்படுகிறது என்பது குறித்து அவர் எந்த விளக்கமும் வழங்கவில்லை.
மேலும், தற்போது ஷில்பா ஷெட்டியும், அவரது கணவர் ராஜ் குந்த்ராவும் 60 கோடி ரூபாய் கடன் மற்றும் முதலீடு முறைகேட்டில் சிக்கியுள்ளனர். இதுபோன்ற பிரச்சினைகள் காரணமாகவே அவர்கள் அந்த ஹோட்டலை விற்கக் கூடும் என்ற கருத்துகளும் வெளியேறி வருகின்றன.