நடிகை சங்கீதா தனது கணவர் மற்றும் பாடகரான கிரிஷ்ஷை விவாகரத்து செய்யப் போவதாக இணையத்தில் பரவி வந்த வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளார். 2009 ஆம் ஆண்டு, சங்கீதா மற்றும் கிரிஷ் திருமணம் திருவண்ணாமலை கோவிலில் நடைபெற்றது. இவர்களுக்கு ஒரு மகள் உள்ளார்.

இதற்கிடையில், சமூக வலைதளங்களில் செயலில் இருந்து வந்த சங்கீதா, தனது இன்ஸ்டாகிராம் கணக்கில் “Sangeetha Krish” என்று வைத்திருந்த பெயரை, தற்போது “Sangeetha Chandran” என்று மாற்றியுள்ளார். பல நடிகைகள் விவாகரத்துக்கு முன்பு கணவரின் பெயரை நீக்கும் நிலை உள்ளதால், சங்கீதாவும் கணவர் கிரிஷ்ஷை பிரிகிறாரா என்ற சந்தேகம் எழுந்தது.
இந்த நிலையில், விவாகரத்து குறித்த வதந்திகளுக்கு சங்கீதா பதில் அளித்துள்ளார். அவர் கூறியதாவது, சமூக ஊடகங்களில் தாம் கணவரை பிரியப் போவதாக வரும் செய்திகள் முற்றிலும் பொய்யானவை, மேலும் தாம் பெயரை மாற்றியது நியூமராலஜி காரணமாக மட்டுமே எனத் தெரிவித்துள்ளார்.