நடிகை சமந்தா ஜிம்மில் Dead Hang சேலஞ்ச் எனப்படும் சேலஞ்சை செய்து அசத்தியுள்ளார். அவருடன் ஒரு ஆண் நண்பரும் பெண் தோழியும் உள்ளார்கள். மூவரும் ஒரே நேரத்தில் மேலே உள்ள கம்பியை பிடித்து தொங்குகிறார்கள். மூவரும் 90 நொடிகள், அதாவது ஒன்றரை நிமிடம் அந்தரத்தில் தொங்குகிறார்கள். சமந்தா உடன் இந்த சேலஞ்ச் செய்தவர்கள் கூட இடையில் தங்களது உடலை அசைக்கிறார்கள். ஆனால் சமந்தா கம்பியைப் பிடித்து தொங்க ஆரம்பத்ததில் இருந்து இறுதி வரை அப்படியே தொங்கினார். அவரது இந்த வீடியோவைப் பார்த்த பலரும் ஆச்சரியப்பட்டு வருகிறார்கள். மேலும் இந்த வீடியோ இணையத்தில் வேகமாக பரவி வருகிறது. அதேபோல் அந்த வீடியோவோடு இந்த சேலஞ்சை பெண்கள் 90 நொடிக்கு தான் செய்ய முடியும் என கூறும் வீடியோ ஒன்றையும் பகிர்ந்துள்ளார். அவை ரசிகர்கள் மத்தியில் வேகமாக பரவி வருகிறது.
