பிரபல நடிகை சமந்தா டிரலாலா மூவிங் பிக்சர்ஸ் என்ற தயாரிப்பு நிறுவனத்தை தொடங்கி `சுபம்’ என்ற திரைப்படத்தை தயாரித்தார். திரைப்படம் கடந்த மே 9 ஆம் தேதி வெளியாகி மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. மேலும் திரைப்படம் ஓடிடியில் வெளியான பிறகு மக்கள் பலரால் இப்படம் ரசிக்கப்பட்டது. அப்படத்தில் சமந்தா ஒரு கேமியோ கதாப்பாத்திரம் நடித்தது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் சமந்தா மீண்டும் 2 வருடங்களுக்கு பிறகு தெலுங்கு திரைப்படத்தில் கதாநாயகியாக நடிக்கவுள்ளார் என்ற தகவல் வெளியாகியுள்ளது. இப்படத்தை நந்தினி ரெட்டி இயக்கவுள்ளார் என தகவல் வெளியாகியுள்ளது.
