பல தடைகளை கடந்து மீண்டும் சினிமா துறையில் பயணத்தை தொடங்கியுள்ள சமந்தா, ‘சுபம்’ என்ற திரைப்படத்தின் மூலம் தயாரிப்பாளராகவும் தன்னை நிலைநிறுத்தியுள்ளார். தற்போது, புதிய திரைப்படங்களில் நடிக்க அவர் தயார் ஆகி வருகிறார்.

அதேசமயம் தனது உடல் எடையை குறைத்து மிகவும் ஸ்லிம் ஆக மாறியுள்ளார் சமந்தா. பதப்படுத்தப்பட்ட உணவுகள், சர்க்கரை, சிவப்பு இறைச்சியை தவிர்த்து, காய்கறி மட்டுமே உணவாக எடுத்துக் கொள்கிறார்.
இதனால், சமந்தா பின்பற்றும் ‘டயட்’ பற்றிய கேள்விகள் அவரைப் பார்க்கும் இடமெல்லாம் மற்றும் சமூக வலைதளங்களில் எழுந்துகொண்டு இருக்கின்றன. ஆனால், சமந்தா இதற்கு எந்த பதிலும் அளிக்காமல் இருப்பதாக கூறப்படுகிறது.ஏற்கனவே சமந்தா கூறிய நெபுலைசர் என்ற சிகிச்சை முறையைப்பற்றி எதிர்வினைகள் கிளம்பியதால், தற்போது அவர் மிகவும் எச்சரிக்கையாக செயல்படுகிறார். எனவே, யாராவது அவரது உணவுப் பழக்கங்களைப் பற்றி கேட்கும்போது, ‘பிடித்ததை சாப்பிடுங்க’ என்று சாமர்த்தியமாக பதிலளித்து, விவாதங்களை தவிர்க்கிறார் என தகவல்கள் தெரிவிக்கின்றன.