சமந்தா’ நடிக்கும் மா இண்டி பங்காரம்’ படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் தொடங்கியுள்றது. இந்த படத்திற்காக கடந்த சில மாதங்களாகவே தீவிரமான ஒர்க் அவுட்டில் ஈடுபட்டு வந்தார் சமந்தா. இந்நிலையில் தற்போது மும்பையில் உள்ள ஜிம்மில் தான் ஒர்க்அவுட் செய்யும்போது எடுத்துக்கொண்ட புகைப்படங்களை அவர் இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ளார். அதில், கண்ணாடி முன்பு உடற்பயிற்சி செய்யும் ஒரு புதிய படத்தை வெளியிட்டுள்ளார். அதோடு, கட்டமைக்க கட்டமைக்க என்றும் ஒரு பதிவு போட்டுள்ளார்.


