கேரளாவின் கொச்சி நகரைச் சேர்ந்த 15 வயதுடைய பள்ளி மாணவன் மிஹிர் முகமது, தனது சில சக மாணவர்களால் கிண்டல் மற்றும் துன்புறுத்தலுக்கு ஆளானதில் மன உளைச்சலுடன் தற்கொலை செய்து கொண்டார். இந்த சம்பவம் கேரளாவில் பெரும் அதிர்ச்சியையும் கவலையையும் ஏற்படுத்தியுள்ளது.
இந்த சம்பவம் கேரளாவைத் தாண்டி பல பிரபலங்களிடமிருந்து இரங்கல் மற்றும் கடும் கண்டனங்களை பெற்றுள்ளது. அந்த வகையில், நடிகை சமந்தா, மிஹிரின் உயிரிழப்பு தொடர்பாக கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும் என்று தன் கோபத்தை வெளியிட்டுள்ளார்.
அவரது சோசியல் மீடியா பதிவில், “2025 இல் இன்னொரு இளம் உயிரை நாம் இழந்துள்ளோம். சிலரின் தனிப்பட்ட விருப்பங்கள், வெறுப்புகள் மற்றும் ஆணவம் காரணமாக இந்தக் கொடுமை நிகழ்ந்துள்ளது. மனம், உணர்வு அல்லது உடல் ரீதியான துன்புறுத்தல்கள், கொடுமைகள் அனைத்தும் கடுமையான தண்டனைகளைத் தக்கவைக்கின்றன. இது வெறும் இரங்கல்களுடன் முடிவடையக் கூடாது. நிச்சயமாக, நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும். சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இதை முறையாக விசாரிப்பார்கள் என்று நம்புகிறேன். மிஹிர் முகமதுக்கு நீதி கிடைக்க வேண்டும்” என்று அவர் கூறியுள்ளார்.