Friday, December 27, 2024

தனது அடுத்த படத்தில் கமிட்டான நடிகை சாய் பல்லவி… இயக்குனரும் ஹீரோவும் யார் தெரியுமா?

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

சாய் பல்லவி பிரேமம் படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானார். இந்த படத்தில் இவர் நடித்த ‘மலர் டீச்சர்’ கதாபாத்திரம் பல ரசிகர்களை கவர்ந்தது. முதல் படத்திலேயே சிறந்த நடிகை என்ற பெயரை பெற்ற சாய் பல்லவி, தொடர்ந்து தமிழ் படங்களில் நடிக்கும் வாய்ப்புகளையும் பெற்றார்.

சமீபத்தில், சிவகார்த்திகேயனுடன் ‘அமரன்’ திரைப்படத்தில் நடித்த இவர், ரசிகர்களிடையே பாராட்டைப் பெற்றார். தற்போது, நாக சைதன்யாவுடன் ‘தண்டேல்’ படத்திலும், பாலிவுட்டில் ‘ராமாயணம்’ படத்திலும் நடித்து வருகிறார்.

இந்த நிலையில், சாய் பல்லவியின் அடுத்த படம் குறித்து தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, பிரபல இயக்குனர் வேணு யெல்டாண்டி இயக்கும் ‘எல்லம்மா’ படத்தில் நடிகர் நித்தினுக்கு ஜோடியாக சாய் பல்லவி நடிக்க உள்ளார். அடுத்த ஆண்டு தொடக்கத்தில் இப்படத்தின் படப்பிடிப்பு தொடங்கும் என்றும், இறுதியில் படம் வெளியிடப்படுவதாக தயாரிப்புக் குழுவினர் திட்டமிட்டுள்ளதாகத் தெரிகிறது. விரைவில் இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

- Advertisement -

Read more

Local News