‘இறுதிசுற்று’ திரைப்படத்தின் மூலம் தமிழில் அறிமுகமான நடிகை ரித்திகா சிங், அதன் பின் ‘ஆண்டவன் கட்டளை’, ‘சிவலிங்கா’, ‘மழைபிடிக்காத மனிதன்’ உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். மேலும் தெலுங்கு மற்றும் கன்னட மொழி திரைப்படங்களிலும் அவர் நடித்துள்ளார். சமீபத்தில் ரஜினிகாந்த் நடித்த ‘வேட்டையன்’ படத்திலும் அவர் நடித்திருந்தார்.
இந்நிலையில், சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருப்பவர் ரித்திகா சிங், ஒரு வீடியோவை வெளியிட்டுள்ளார். அந்த வீடியோவில், அதிக உடல் எடையில் இருந்த போது, அவர் எப்படி கடுமையான உடற்பயிற்சி மூலம் எடையை குறைத்தார் என்பதை பகிர்ந்துள்ளார்.
அந்த பதிவில், “கடந்த மூன்று மாதங்களை நான் ஒருபோதும் மறக்க முடியாது. ஏனெனில் நான் இதுவரை இல்லாத அளவுக்கு எடை கூடியிருந்தேன். இதனால் முழங்கால்களில் சகிக்க முடியாத வலியை அனுபவித்தேன். என்னால் சுலபமாக நகர முடியவில்லை. நடனம்கூட ஆட முடியாத நிலைக்கு சென்றேன். அப்போது கண்ணாடியில் என்னைப் பார்த்தபோது, ‘நீ பார்த்தபடி அல்ல, பார்த்ததைவிட சிறப்பாக இருக்க வேண்டும்’ என்று என்னிடம் நானே கூறிக்கொண்டேன்” என தெரிவித்துள்ளார்.