தமிழ் சினிமாவின் முன்னணி கதாநாயகிகளில் ஒருவராக விளங்குபவர் ரெஜினா கசாண்ட்ரா. அவர் கண்ட நாள் முதல், அழகிய அசுரா, கேடி பில்லா கில்லாடி ரங்கா, மாநகரம், சிலுக்குவார்பட்டி சிங்கம், ஜெமினிகணேசனும் சுருளி ராஜனும், மிஸ்டர் சந்திரமௌலி, நெஞ்சம் மறப்பதில்லை, கான்ஜூரிங் கண்ணப்பன் போன்ற படங்களில் நடித்துள்ளார்.

அதோடு, தெலுங்கு மற்றும் இந்தி திரைப்படங்களிலும் தன் நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார். சமீபத்தில் விடாமுயற்சி திரைப்படத்தில் அஜித்துக்கு எதிராக வில்லன் கதாபாத்திரத்தில் நடித்துப் பார்வையாளர்களின் கவனத்தை ஈர்த்தார். தற்போது மூக்குத்தி அம்மன் – 2 மற்றும் செக்சன் 108 திரைப்படங்களில் நடித்து வருகிறார். மேலும் இந்திய சினிமாவின் முன்னணி இயக்குனர்களில் ஒருவரான மதுர் பந்தார்க்கரின் தி வைவ்ஸ் படத்திலும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளார்.
இந்நிலையில், ரெஜினா கசாண்ட்ரா திரைத்துறையில் அறிமுகமாகி 20 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளது. இதையொட்டி, அவரது ரசிகர்கள் சமூக வலைதளங்களில் ரெஜினாவின் அழகிய புகைப்படங்களை பகிர்ந்து, அவருக்கு வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.