நடிகர் தனுஷ், ‘பவர் பாண்டி’ மூலம் இயக்குநராக அறிமுகமானார். அதனைத் தொடர்ந்து, அவர் இயக்கி நடித்த ‘ராயன்’ திரைப்படம் கடந்த ஆண்டு வெளியானது. தற்போது, அவர் இயக்கும் மூன்றாவது படமான ‘நிலவுக்கு என் மேல் என்னடி கோபம்’ உருவாகியுள்ளது. இந்தப் படத்தில், தனுஷின் சகோதரியின் மகன் பவிஷ் ஹீரோவாக அறிமுகமாகிறார்.அனிகா சுரேந்திரன், பிரியா பிரகாஷ் வாரியர், மாத்யூ தாமஸ், வெங்கடேஷ் மேனன் உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.
ஜி.வி. பிரகாஷ் குமார் இசையமைக்கும் இப்படத்தை வுண்டர்பார் பிலிம்ஸ் தயாரிக்கிறது. படத்தின் டிரெய்லர் பிப்ரவரி 12-ஆம் தேதி வெளியிடப்பட்டது, மேலும் படம் பிப்ரவரி 21-ஆம் தேதி திரைக்கு வரவுள்ளது.

டிரெய்லரை பார்த்த நடிகை ராஷ்மிகா மந்தனா, தனுஷை பாராட்டி, தனுஷ் சார், நீங்கள் எப்படி நடிகர், இயக்குனர், எழுத்தாளர், பாடகர், நடனக் கலைஞர், இசையமைப்பாளர் என அனைத்து வேலையையும் செய்கிறீர்கள்? என்று ஆச்சரியத்துடன் பாராட்டு தெரிவித்துள்ளார். ராஷ்மிகா, தனுஷுடன் ‘குபேரா’ படத்தில் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.