தெலுங்கு, ஹிந்தி மற்றும் தமிழ் திரையுலகுகளில் முன்னணி நடிகையாக வலம்வரும் ராஷ்மிகா மந்தனா தற்போது தொழிலதிபராகவும் அவதாரம் எடுத்துள்ளார். ‘Dear Diary’ என்ற பெயரில் தனக்கே உரிய சென்ட் பிராண்ட் ஒன்றை துவங்கி, அதைத் திறம்பட அறிமுகப்படுத்தியுள்ளார். இது தொடர்பாக அவர், “சென்ட் என்பது எனது வாழ்க்கையில் மிக முக்கியமானது. இப்போது அதை உங்களுடன் பகிர்கிறேன். இது உங்களுக்கு நிச்சயமாக பிடிக்கும் என நம்புகிறேன்,” என தெரிவித்துள்ளார்.

ராஷ்மிகாவின் இந்த புதிய முயற்சிக்கு, நடிகர் விஜய் தேவரகொண்டா வாழ்த்து தெரிவித்துள்ளார். இவரைத் தவிர, பல பிரபலங்களும், ரசிகர்களும் அவருக்கு வாழ்த்து கூறி சமூக வலைதளங்களில் பாராட்டுகளை தெரிவித்துள்ளனர்.
தமிழ் திரையுலகில் முன்னணி நடிகையாக இருக்கும் நயன்தாரா, ஏற்கனவே ‘9Skin’ என்ற அழகு சாதனப் பொருட்கள் சார்ந்த பிராண்டை தொடங்கி வெற்றிகரமாக நடத்தி வருகிறார். இப்போது அந்தப் பாதையில், அழகு மற்றும் பராமரிப்பு பொருட்கள் வணிக துறையில் ராஷ்மிகா மந்தனாவும் கலந்துகொண்டு, தனது முதலீட்டு முயற்சியில் கால் பதித்துள்ளார்.