இயக்குனர் ராம் கோபால் வர்மா, தன்னுடைய விருப்பமான ஹாரர் வகை திரைப்படங்களில் மீண்டும் கவனம் செலுத்தி வருகிறார். சில மாதங்களுக்கு முன்பு, மனோஜ் பாஜ்பாய் மற்றும் ஜெனிலியா தேஷ்முக் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ள போலீஸ் ஸ்டேஷன் மெய்ன் பூத் என்ற படத்தை அவர் அறிவித்திருந்தார்.

இந்நிலையில், தற்போது நடிகை ரம்யா கிருஷ்ணனும் இப்படத்தில் இணைந்துள்ளார். இந்த படத்திற்கான இவரது கதாபாத்திர தோற்ற போஸ்டர் வெளியாகி பெரும் கவனத்தை ஈர்த்துள்ளது.
இந்த திரைப்படத்தை வௌவ் எமிரேட்ஸ் மீடியா புரொடக்ஷன் மற்றும் கர்மா மீடியா அண்ட் என்டர்டெயின்மென்ட் ஆகிய நிறுவனங்கள் இணைந்து தயாரித்து வருகின்றன. தற்போது படத்தின் படப்பிடிப்பு பணிகள் நடைபெற்று வருகின்றன. வெளியீட்டு தேதி இன்னும் அறிவிக்கப்படவில்லை என்றாலும், போலீஸ் ஸ்டேஷன் மெய்ன் பூத் அடுத்த ஆண்டு திரையரங்குகளில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

