மலையாளத்தில் லோகா சாப்டர் 1 படத்தைத் தயாரித்து கெஸ்ட் ரோலில் நடித்த துல்கர் சல்மான், தற்போது காந்தா திரைப்படத்தையும் தயாரித்து அதில் நடித்து வருகிறார். இதையடுத்து, தெலுங்கில் புதுமுக இயக்குநர் ரவி நெலகுடிட்டி இயக்கும் தனது 41வது படத்தில் நடிக்கவிருக்கிறார்.

இந்த படத்தில் துல்கருக்கு ஜோடியாக பூஜா ஹெக்டே ஒப்பந்தமாகியுள்ளார். ஜி.வி. பிரகாஷ்குமார் இசையமைக்கும் இப்படத்தில் ஒரு முக்கியமான கதாபாத்திரத்திற்காக பல நடிகைகள் பரிசீலிக்கப்பட்ட நிலையில், பாகுபலி திரைப்படத்தில் ராஜமாதாவாக நடித்த ரம்யா கிருஷ்ணன் தற்போது உறுதிசெய்யப்பட்டுள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது.
மேலும், இந்த படத்தைத் தவிர தமிழில் ரஜினிகாந்த் நடித்து வரும் ஜெயிலர்-2 படத்திலும் ரம்யா கிருஷ்ணன் அவருக்கு ஜோடியாக நடித்து வருகிறார் என்பது கவனிக்கத்தக்கது.