முன்னணி நடிகையாக இருந்த ரம்யா கிருஷ்ணன் ‘‘பாகுபலி’’ திரைப்படம் மூலம் இந்திய அளவில் மேலும் பிரபலம் அடைந்தார், இந்நிலையில் ஒவ்வொரு நாளும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் திருப்பதிக்கு வந்து ஏழுமலையானை தரிசித்து வருகின்றனர். அதேபோல் இன்று காலை நடிகை ரம்யா கிருஷ்ணன் தனது மகனுடன் திருப்பதி ஏழுமலையான் கோவிலில் தரிசனம் செய்தார்.

அப்போது பல பக்தர்கள் ரம்யா கிருஷ்ணனுடன் புகைப்படம் எடுத்து மகிழ்ந்தனர். இந்த திகழ்வு தொடர்பான வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகின்றது.
பல ஆண்டுகளாக திரைப்படத் துறையில் தொடர்ந்து வெற்றிகரமாக வலம்வரும் ரம்யா கிருஷ்ணன், தற்போது துணை கதாபாத்திரங்களில் அதிகமாக நடித்துக் கொண்டிருக்கிறார். ஒருகாலத்தில் முன்னணி கதாநாயகியாக ரசிகர்களை ஈர்த்திருந்த ரம்யா கிருஷ்ணன், இப்போது அம்மா, மாமியார், போன்ற கதாபாத்திரங்களில் நடித்து ரசிகர்களிடம் வரவேற்பைப் பெற்று வருகிறார்.