நாற்பது ஆண்டுகளுக்கும் மேலாக திரைத்துறையில் தன்னுடைய தனித்தன்மையுடன் நடித்து வரும் மூத்த நடிகை ரம்யா கிருஷ்ணன், ‘அம்மன்’, ‘படையப்பா’, ‘பாகுபலி’ போன்ற பல வெற்றி படங்களில் தன் சிறந்த நடிப்பின் மூலம் ரசிகர்களின் மனதில் நிலையான இடத்தை பெற்றுள்ளார். கடைசியாக ‘ஜெயிலர்’ திரைப்படத்தில் நடிகர் ரஜினிகாந்தின் மனைவியாக நடித்திருந்தார். தற்போது அவர் ‘ஜெயிலர்-2’ திரைப்படத்தில் நடித்து வருகிறார்.

இந்நிலையில், தெலுங்கு நடிகரும் வில்லன் கதாபாத்திரங்களுக்காக பிரபலமானவருமான ஜெகபதி பாபு தொகுத்து வழங்கும் ஒரு தெலுங்கு நிகழ்ச்சியில் ரம்யா கிருஷ்ணன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். அப்போது ஜெகபதி பாபு நகைச்சுவையாக, “சிறுவயதிலிருந்தே உங்களைப் பார்த்து பலர் சைட் அடித்திருப்பார்கள் அல்லவா? என்று கேட்க, அதற்கு ரம்யா கிருஷ்ணன் சிரித்தபடி, அவர்களில் நீங்களும் ஒருவர்தானே? என்று நகைச்சுவையாக பதிலளித்தார்.
ரம்யா கிருஷ்ணனும் ஜெகபதி பாபுவும் பல படங்களில் இணைந்து நடித்துள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

