நடிகர் அஜித் குமார் நடிப்பில் மகிழ் திருமேனி இயக்கத்தில் விடாமுயற்சி படத்தில் கமிட்டானார். அதே நேரத்தில், ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் குட் பேட் அக்லி என்ற மற்றொரு படத்திலும் அவர் கமிட்டாகி நடித்து வந்தார்.
விடாமுயற்சி மற்றும் குட் பேட் அக்லி என இரு படங்களுக்காக மாறி மாறி படப்பிடிப்பில் ஈடுபட்டிருந்தார். சமீபத்தில், குட் பேட் அக்லி படப்பிடிப்பு முழுமையாக முடிவடைந்ததை அடுத்து, தற்போது விடாமுயற்சி படத்தின் கடைசி கட்ட படப்பிடிப்பில் அவர் பங்கேற்று நடித்து வருகிறார்.
விடாமுயற்சி படத்தின் இறுதி கட்ட படப்பிடிப்பில் அஜித்துடன் நடிகை த்ரிஷா இணைந்து நடிக்கின்றனர். சமீபத்தில், இருவரின் காட்சிகள் புகைப்படங்களாக வெளியானது. அதற்குப் பிறகு, புதிய அப்டேட்டாக, ஆடை படத்தில் அமலா பாலுடன் நடித்த தொகுப்பாளினி ரம்யா, தற்போது விடாமுயற்சி படத்தில் அஜித்துடன் இணைந்து நடித்து வருகிறார் என அந்த படத்தின் குழு அறிவித்துள்ளது.