மோகன் ஜி இயக்கத்தில் தமிழ், தெலுங்கு, ஹிந்தி, கன்னடம், மலையாளம் ஆகிய மொழிகளில் உருவாகி வரும் ‘திரௌபதி 2’ படத்தில் ரிச்சர்ட் ரிஷி ஹீரோவாக நடித்துள்ளார். இந்த படத்தில் திரௌபதி தேவி கதாபாத்திரத்தில் நடித்துள்ள ரக்ஷனாவின் முதல் லுக் போஸ்டரை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர்.

படக்குழு தெரிவிப்பதாவது: 2020ஆம் ஆண்டு வெளியானும் மிகப்பெரிய வெற்றி பெற்றும் ‘திரௌபதி’ திரைப்படத்தின் தொடர்ச்சியாக உருவாகும் இப்படம், அதன் வரலாற்று பின்னணியை மேலும் விரிவாகக் காண்பிக்கிறது. 14ஆம் நூற்றாண்டை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்பட்ட இந்த படம், ஹோய்சால பேரரசர் வீர வள்ளலார் III-ன் ரத்தக்கறை படிந்த ஆட்சிக் காலம், சேந்தமங்கலம் காடவராயர்களின் வீரத்தையும் எதிர்ப்பையும், மேலும் தமிழ்நாட்டில் முகலாய படையெடுப்பால் ஏற்பட்ட கலக்கம் மற்றும் மாறுபாடுகளையும் பின்னணியாகக் கொண்டுள்ளது.
இந்தப் பிரமாண்டமான வரலாற்று மறுகட்டமைப்பில், திரௌபதி தேவியின் முதல் பார்வை போஸ்டர் அறிமுகம், படத்தின் உணர்ச்சிப்பூர்வமான தருணத்தை இரண்டாம் பாகத்துடன் வலுவாக இணைக்கும் முக்கிய அம்சமாக மாறியுள்ளது. ரிச்சர்ட் ரிஷி மற்றும் ரக்ஷனா இந்துசூடன் ஆகியோர் இப்படத்தின் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருக்கின்றனர். நடிகர் நட்டி நட்ராஜ் படத்தில் முக்கிய வேடத்தில் நடித்துள்ளார். மேலும் ஒய்.ஜி. மகேந்திரன், நாடோடிகள் பரணி உள்ளிட்ட பலரும் இப்படத்தில் நடித்துள்ளனர்.

