நடிகை பிரியங்கா மோகன் ‘ஓந்த் கதே ஹெல்லா’ என்ற கன்னட திரைப்படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமானவர். அதன் பின்னர் தெலுங்கு மற்றும் தமிழ் திரைப்படங்களிலும் பணியாற்றி, பிரபலமான நடிகையாக திகழ்ந்து வருகிறார்.

இந்த ஆண்டில், பவன் கல்யாண் நடித்த ‛ஓஜி’ எனும் தெலுங்கு படம் இவரது நடிப்பில் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்றது.
இந்நிலையில், ஆறு ஆண்டுகளுக்குப் பிறகு, ‘666 ஆப்ரேஷன் ட்ரீம் தியேட்டர்’ என்ற படத்தின் மூலம் மீண்டும் கன்னட திரையுலகில் நடிக்கிறார். அவரது பிறந்தநாளை முன்னிட்டு இந்த படத்தின் அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. ஹேமந்த் ராவு இயக்கும் இப்படத்தில் நடிகர் சிவராஜ் குமார் கதாநாயகனாக நடிக்கிறார்.

