நடிகை பிரியங்கா சோப்ரா, விஜய் நடித்த ‘தமிழன்’ திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர். பின்னர் பாலிவுட் திரையுலகில் முன்னணி நடிகையாக வளர்ந்தார். திருமணத்திற்குப் பிறகு, ஹாலிவுட் திரைப்படங்கள் மற்றும் வெப்சீரியஸ்களில் தொடர்ந்து பிஸியாக நடித்து வருகிறார். தற்போது, இயக்குநர் ராஜமவுலி இயக்கும் புதிய திரைப்படத்தில் மகேஷ்பாபுவுடன் இணைந்து நடித்து வருகிறார்.

இந்நிலையில், கடந்த ஜூலை 18ம் தேதி தனது 43வது பிறந்த நாளை கணவர் நிக் ஜோனஸ் மற்றும் மகள் மாட்டி மேரியுடன் சிறப்பாகக் கொண்டாடினார். பிறந்த நாளுக்குப் பிறகு, கடற்கரையில் பிகினி உடையில் எடுத்துக்கொண்ட புகைப்படங்களை சமூக ஊடகங்களில் பகிர்ந்துள்ளார்.
அதோடு, பிறந்த நாள் வாழ்த்துகளைத் தெரிவித்த அனைவருக்கும் நன்றி கூறியுள்ள பிரியங்கா சோப்ரா, “உங்கள் வாழ்த்துகள் எனது இதயத்தை நிறைத்துவிட்டது” என தனது பதிவில் தெரிவித்துள்ளார்.