தமிழில் முகமூடி படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமாகி இந்திய சினிமாவில் மிகவும் பிசியான ஒரு நடிகையாக வலம் வருகிறார் நடிகை பூஜா ஹெக்டே.
அவர் நடித்துள்ள சூர்யாவின் ரெட்ரோ திரைப்படம் மே 1ல் ரிலீஸாகிறது. அதேபோல் விஜய் நடிக்கும் ஜன நாயகன் படத்திலும் கதாநாயகியாக நடித்து வருகிறார்.
இபந்நிலையில் காஞ்சிபுரம் பட்டுப் புடவை அணிந்து போட்டோ ஷுட் எடுத்து அவற்றை இன்ஸ்டாவில் வெளியிட்டுள்ளார். “70 வருட பழமையான ஒரு அழகிய புடவை. எனது அழகான காஞ்சிபுரம் பாட்டியின் புடவை, என்னை அந்தக் காலத்திற்கே அழைத்துச் சென்றுவிட்டது. முதல் மழைக்குப் பிறகு ஈரமான மங்களூருவின் சேற்று வாசம், திருமணத்திற்குச் செல்வதற்கு முன்பு வீட்டில் மல்லிகையின் புதிய வாசனை… ஓ… எளிமையான விஷயங்களில் எத்தனை அழகு என அந்த பாரம்பரிய புடவை அணிந்த அனுபவத்தை பதிவிட்டுள்ளார்.